search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவல் டெஸ்ட்"

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest
    ஓவல்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 

    5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.

    சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 
    ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து இந்தியாவை விட 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அறிமுக போட்டியிலேயே ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட இந்தியா 40 ரன்கள் பின்தங்கியது.

    இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் களமிறங்கினார்கள். ஜென்னிங்ஸ் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து குக் உடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



    அணியின் எண்ணிக்கை 62 ஆக இருந்த போது ஜடேஜா வீசிய சுழலில் 20 ரன்கள் அடித்திருந்த மொயின் அலி ஆட்டமிழந்தார், பின்னர் களமிறங்கிய கேப்டன் ரூட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து. குக் மற்றும் ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களுக்கு இங்கிலாந்து 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ரன்கள் குவித்துள்ளது. குக் 46 ரன்கள் மற்றும் ரூட் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

    இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவை விட இங்கிலாந்து 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND
    ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்த கே. எல் ராகுல், தற்போது மீண்டும் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvIND #OvalTest #KLRahul

    இந்தியா இங்கிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில், கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே 7 கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் கே. எல் ராகுல், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 

    இந்தியாவிற்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடரில் 10 கேட்ச்களை பிடித்திருந்த அஜித் வடேகர், ராகுல் டிராவிட், ரஹானே ஆகியோரின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார் கே.எல் ராகுல். தற்போது, ஓவலில் நடந்து வரும் 5-வது போட்டியிலும் கே.எல் ராகுல் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    பொதுவாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களில் 13 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட் தான் முதலிடத்தில் உள்ளார். 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 13 கேட்ச்களை பிடித்துள்ளார். 

    ஓவல் டெஸ்ட் போட்டியில் நேற்று ஜடேஜா பந்தில் பிராட் ராகுலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன் மூலம், இந்த தொடரில் ராகுல் 13 கேட்ச் பிடித்து டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் மீதம் உள்ளதால், அதில் கே.எல் ராகுல் இன்னும் ஒரு கேட்ச் பிடித்தால் புதிய சாதனையை படைப்பார். 
    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் குக் அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித் அவுட்டானார். ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தது. 

    ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானை 3 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஸ்டூவர்ட் பிராடு. அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    ராகுலும், புஜாராவும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால், அணியின் எண்ணிக்கை 70 ஆக இருக்கும் போது ராகுல் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடந்து புஜாராவும் 37 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய ரகானே வந்த வேகத்திலேயே ரன் ஏதும் அடிக்காமல் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால், இந்திய அணி 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.



    பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் விகாரி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்தது. 

    எனினும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49  ரன்களில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

    விகாரி 25 ரன்களுடனும், ஜடேஜா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், பிராட் மற்றும் குர்ரண் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட இந்தியா 158 ரன்கள் பின் தங்கியுள்ளது. #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமானர். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இடம்பிடித்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, 23 ரன்கள் அடித்திருந்த ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. 

    பின்னர் அலஸ்டர் குக் தனது 71வது ரன்னில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ரூட் (0), பரிஸ்டோ (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். 

    சிறப்பாக விளையாடிய மொயின் அலி (50) தனது அரை சதத்தினை பதிவு செய்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குர்ரன் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதில் ஜோஸ் பட்லர் 11 ரன்களும், அடில் ரஷித் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். 





    இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. #ENGvIND
    ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டியை நேரில் பார்ப்பதற்காக விஜய் மல்லையா மைதானத்துக்கு வந்திருந்தார். #ENGvIND #VijayMallya #OvalTest
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வங்கிக்கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, மைதானத்துக்கு வருகை தந்து போட்டியை நேரில் கண்டு களித்தார்.

    மல்லையாவின் சொத்துக்களை முடக்கவும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் அடிப்படையில் மும்பை கோர்ட்டிலும் அவர் மீது நடக்கும் வழக்கில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    ×